தொடு வானக் கோணத்திலும்
தொட்டு விடாத வானம்
பூமியை மெய்யாய்த் தொடும்
ஒரே வழி .....
************
வானத்து தேவதைகள்
பூமிக்கு இறங்கி வர
மேகம் தொங்க விட்ட நூலேணி
பேரிகை முழக்கத்துடன்
பெரிய இடத்து தேவதைகள்
இறங்கி வருகின்றன
கண்டவர்கள் கண் பறிக்க
மின்னல் காவலர்களும் ....
*****************
காலுக்கடியில்
கடலின் குட்டி தரிசனம்
காகித கப்பல் முதலாளிகளுக்கு மட்டும்...
**************
பேரிடி சத்தம் கிளப்பிவிட்ட
பயத்தின் போது மட்டும்
கண்ணனையும் மிஞ்சி விடும்
பெருந்தெய்வம் ஆகிவிடுகிறான்
அர்ச்சுனன் ...
*************
சொல்லாமல் வந்த தோழி
எதிர்பாராமல் தந்த ஆனந்தம் போல்
பூரித்துச் சிரித்தது பூமி
பேசி ,சிரித்து , கும்மாளம் போட்டு - பின்
பிரியா விடைத் தந்து
காத்திருக்கிறது
மழையின் அடுத்த வருகைக்காய் ....
தொட்டு விடாத வானம்
பூமியை மெய்யாய்த் தொடும்
ஒரே வழி .....
************
வானத்து தேவதைகள்
பூமிக்கு இறங்கி வர
மேகம் தொங்க விட்ட நூலேணி
பேரிகை முழக்கத்துடன்
பெரிய இடத்து தேவதைகள்
இறங்கி வருகின்றன
கண்டவர்கள் கண் பறிக்க
மின்னல் காவலர்களும் ....
*****************
காலுக்கடியில்
கடலின் குட்டி தரிசனம்
காகித கப்பல் முதலாளிகளுக்கு மட்டும்...
**************
பேரிடி சத்தம் கிளப்பிவிட்ட
பயத்தின் போது மட்டும்
கண்ணனையும் மிஞ்சி விடும்
பெருந்தெய்வம் ஆகிவிடுகிறான்
அர்ச்சுனன் ...
*************
சொல்லாமல் வந்த தோழி
எதிர்பாராமல் தந்த ஆனந்தம் போல்
பூரித்துச் சிரித்தது பூமி
பேசி ,சிரித்து , கும்மாளம் போட்டு - பின்
பிரியா விடைத் தந்து
காத்திருக்கிறது
மழையின் அடுத்த வருகைக்காய் ....