ஒரு தொடுதலில் ஏற்றப்படும்
மின் விளக்குகள் வந்தபின்
எண்ணெய் ஊற்றி,
திரியை ஊற வைத்து
காத்திருக்கத் தேவை இல்லை...
புளி சக்கை சேர்த்து வைத்து
விளக்குத் தேய்க்கத் தேவை இல்லை...
திருக்கார்த்திகைக்குக் கூட
அகல் விளக்குகள் அகற்றப்பட்டு விட்டன.
கூடைக்குள் அடைக்கப்பட்ட
மெழுகு வர்த்திகள் தோற்றுவிட்டன
சீரியல் விளக்கு தோரணத்தின் முன்...
கடவுள் படத்திற்க்குக் கீழ்
அணையா விளக்குகள்
சுடரின் அசைவுகளையும்
இயந்திரமாக்கி விட்டன..
தீபச் சுடரைச் சுற்றும்
விட்டில்கள் மட்டும்
இன்னும் தேடுகின்றன
உண்மை தீபங்களை...
No comments:
Post a Comment